அரசாணை 152 ரத்து செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

30 November 2022

அரசாணை 152 ரத்து செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி அலுவலகம் முன்பாக ஊரக வளர்ச்சி உள்ளாட்சி த்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் துப்புரவு தொழிலாளர்கள்,  மேற்பார்வையாளர் பணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வகைப்படுத்தப்பட்ட நிரந்தர பணியிடங்களை அவுட்சோர்சிங் என்கிற பெயரில் தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி துப்புரவு பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 460 ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது..

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளாளர் வீராசாமி, கௌரவத் தலைவர் தங்கராசு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் 
எம்.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட துணை தலைவர் மகேஷ்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சேகர், வாலிபர் சங்க மாநில குழு உறுப்பினர் 
எம்.கே.பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்கள், 

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உளுந்தூர்பேட்டை நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்... 

கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்