அஜித்துக்கு டபுள் ரோலா

30 November 2022

துணிவு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், அதன் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஹெச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நீண்ட தாடியுடன் நடித்து வந்த நடிகர் அஜித் தற்போது திடீரென க்ளீன் ஷேவ் லுக்கிற்கு மாறியுள்ள லேட்டஸ்ட் போட்டோ டிரெண்டாகி வருகிறது.துணிவு படத்தில் நடிகர் அஜித் டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ளாரா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.தாரை தப்பட்டை கிழியப் போகுது வரும் பொங்கலுக்கு அஜித் மற்றும் விஜய் என தமிழ் சினிமாவின் 2 டாப் ஹீரோக்களின் படங்கள் வெளியாக உள்ள நிலையில், தியேட்டர்களில் தாரை தப்பட்டை கிழியப் போகுது. வாரிசு டீம் மற்றும் துணிவு டீம் இரண்டுமே புதிய போஸ்டர்களையும் தினம் தினம் படங்கள் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டு வெறித்தனமாக ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

மீண்டும் க்ளீன் ஷேவ் வலிமை படத்தில் க்ளீன் ஷேவ் லுக்கில் நடிகர் அஜித் நடித்திருந்த நிலையில், துணிவு படத்தில் தாடி, மீசையுடன் டெரர் லுக்கில் அஜித் படு மாஸாக காட்சி அளித்தார். இந்நிலையில், மீண்டும் பழையபடி க்ளீன் ஷேவ் லுக்கில் நடிகர் அஜித் மாறியுள்ள புதிய புகைப்படம் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. தேவ் சக்திவேல் எனும் செலிபிரிட்டி ஹேர் ஸ்டைலிஸ்ட் அஜித்தின் இந்த புதிய லுக்கை உருவாக்கி இருக்கிறார்.