கொற்றவை நியூஸ் செய்தி எதிரொலியால் சாலையோர பள்ளம் சீரமைக்கப்பட்டது.

13 October 2021


திருவாரூர் அருகே "கொற்றவை நியூஸ்"செய்தி எதிரொலியால் சாலையோர பள்ளம் சீரமைக்கப்பட்டது.

திருவாரூர் அருகே சாலையோரம் உள்ள ஆபத்தான பள்ளத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுவதை தடுக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். 

     திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் இருந்து மத்திய பல்கலைக்கழகம் செல்லும் பிரிவு சாலை  வழியாக  கனரக வாகனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகத்துக்குச்  செல்லும் வாகனங்கள் என நூற்றுகணக்கான வாகனங்கள் அன்றாடம் சென்று வருகிறது. 

இச்சாலையில் வெட்டாற்று பாலம் அருகே திரும்பும் இடத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இதில் கனரக வாகனங்கள் திரும்பும் போது இந்த இடத்தில் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி வந்தது..

இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் தற்போது இந்த இடத்தில் சாலையோரம்  மண் மூட்டைகள் வைக்கப்பட்டு  சிகப்பு கோடி நட்டு எச்சரிக்கை செய்துள்ள போதிலும் இரவு நேரங்களில் சாலையின் திருப்பத்தில் உள்ள பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

சாலை விபத்துக்களைத் தடுக்க மாவட்ட காவல் துறையினர் விபத்து ஏற்படும் இடங்களை கண்டறிந்து ஆங்காங்கே சாலையில் தடுப்புகளை அமைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். இருந்தபோதிலும் இதுபோன்ற பெரிய ஆபத்தான பள்ளங்கள் உள்ள இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர்தான் சாலையோரம் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

எனவே சாலையோரம் ஆபத்தான நிலையில் உள்ள இந்தப் பெரிய பள்ளம் உள்ள பகுதியில்  நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து கடந்த 7-ந்தேதி "கொற்றவை நியூஸ்"-ல் படத்துடன் செய்தி வெளியானது. தடுப்புச் சுவர் அமைக்கப்படுமா? இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் தடுப்பு கட்டைகள் அமைத்து மண் மூட்டைகள் போட்டு சீரமைக்கப்பட்டது. 
         
இதனையடுத்து செய்தி வெளியிட்ட "கொற்றவை நியூஸ்" க்கும், உடன் நடவடிக்கை எடுத்து சீரமைத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும்  வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.

*நிருபர் மீனா திருவாரூர்*