தேசிய 100நாள் வேலை முறையாக வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

15 September 2021

 தேசிய 100நாள் வேலை திட்டத்தில் முறையாக பணிகள் வழங்ககோரி மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்*

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் 100 நாட்கள் வேலைவாய்ப்பில் முறையாக தொடர்ந்து பணிகள் வழங்கபடவில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த சில மாற்றுத்திறனாளிகள் மேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேலூர் யூனியன் பிடிஓ நாளை முதல் முறையாக பணிகள் வழங்கபடும் என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.