தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.

10 September 2021

நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் பன்வாரிலால் புரோகித்துக்கு அண்மையில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் இனி பஞ்சாப் மாநில ஆளுநராக மட்டும் பதவி வகிப்பார் என குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.