தாம்பரம் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை

24 August 2022

சென்னை:

தாம்பரம் மாநகராட்சி மாடம்பாக்கம் அடுத்த மப்பேடு பகுதியில் பல வருடங்களாக வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட நரிக்குறவர் இன மக்களை நெடுஞ்சாலை துறை தனது சாலை விரிவாக்க பணிக்காக அவர்களின் குடியிருப்புகளை எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அகற்ற அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர். அதனை அறிந்து அவர்களிடம் குறைகளை கேட்டு அவர்களுக்கு மாற்று இடம் அமைத்து கொடுக்க தாம்பரம் வட்டாட்சியர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி மாலாசெல்வகுமார், மாவட்ட விவசாயி அணி தலைவர் செல்வகுமார் பிரச்சார பிரிவு மாவட்ட துணை தலைவர் ஸ்டாலின் k சாமி, மாடம்பாக்கம் மண்டல தலைவர் கண்ணன், தாம்பரம் கிழக்கு நகர தலைவர் சசிகுமார் பொதுச்செயலாளர் நடராஜன் மற்றும் விஜயகுமார். மேலும் செங்கல்பட்டு மண்டல தலைவர் சௌபாக்யா, மண்டல பிரபாரி பிரகாஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

செய்தியாளர், கணேஷ்