மீண்டும் மாறியது 'மாமனிதன்' ரிலீஸ் தேதி

22 May 2022

சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.


ஏற்கனவே மூன்று முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ள இந்த படம் வரும் ஜூன் 24ஆம் தெதி வெளியாகும் என சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. தற்போது அதற்கு ஒரு நாள் முன்னதாக ஜூன் 23ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.