ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம்!!

30 July 2022

ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம்!! 

 29.7.22  மாவட்டத் தலைவர் ஆனந்த பாண்டியன் தலைமையில் பொதுச் செயலாளர் A.சுரேஷ் முன்னிலையில் குமரகுருபரன் வரவேற்புரை ஆற்றினார்.
இதில் புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்திடவும் கருணை ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும், மத்திய கூட்டுறவு வங்கிகளை மாநில கூட்டுறவு வங்கியுடன் இணைத்திடவும், உதவி மேலாளர் பணியிடத்தில் நேரடி நியமனத்தை ரத்து செய்திடவும், பணியின் திறனை அதிகரித்திடவும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது. S.ராஜன் நன்றியுரை கூற தர்ணா போராட்டம் நிறைவுபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி