திருச்சி அரியமங்கலம் நேருஜிநகரில் அமைச்சர் உத்தரவு படி மழைநீர் வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணியானது நடைபெற்றது...

09 June 2021


திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலம் துவங்கும் முன் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்யுமாறுநகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார்.

அதனடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மனித ஆற்றல் மூலம் 10,083 மீட்டர் நீளம் தூர்வாரும் பணியானது நடைபெற்று வருகிறது.

இதில் அரியமங்கலம் கோட்டத்தில் 23 மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் 2,538 மீட்டர் நீளம் தூர்வாரப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக
அரியமங்கலம் 28வது வார்டு நேருஜி நகரில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலை 30க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மழைநீர் வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். 
அப்போது தூய்மை பணியாளர்கள் முகக்கவசம் கையுறை ,மற்றும் ரப்பர் ஷூக்களை அணிந்து கொண்டு போதுமான பாதுகாப்பு உபகரணங்களுடன் மழைநீர் வடிகால் வாய்க்காலில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

மழைக்காலம் துவங்கும் முன்பே மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.