ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த 'புஷ்பா' பட நடிகை பலி

21 January 2022

புஷ்பா படத்தில் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய துணை நடிகை ஜோதி ரெட்டி ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் 'புஷ்பா' . இப்படத்தில் வரும் 'ஏ சாமி' பாடலில் ஜோதி ரெட்டி என்ற துணை நடிகை நடித்திருக்கிறார்.இந்நிலையில் ஜோதி நேற்றைய தினம் 5.30 மணியளவில் ரயில் பயணிக்கும் போது ஷாத்நகரில் ரயில் நின்றதாக நினைத்து பாதி தூக்கத்தில் இருந்த ஜோதி காச்சிகுடா ஸ்டேஷ்ன் வந்துவிட்டதாக நினைத்து ஓடும் ரயிலில் இருந்து இறங்கியுள்ளார்.அப்போது தவறுதலாக வேறு ஒரு ரயில் நிலையத்தில் இறங்கியதாக உணர்ந்த ஜோதி, மீண்டும் ரயில் ஏற முயன்ற போது, தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலை இடுப்பு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு கிடந்துள்ளார்.


இதனையடுத்து அங்கிருந்த போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.இதனிடையே அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜோதி ரெட்டியின் மறைவுக்கு சினிமா துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.