நல்வாழ்விற்கான வழிமுறைகள்

04 April 2021

* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டி தங்குவதற்கு சிந்தனை செய்யாதீர்கள்.
* ஆசை பாவங்களின் வேராகும். நீ அதிகமாக விரும்பினால் அது உன்னை குருடனாகவும் செவிடனாகவும் மாற்றி விடும்.
* கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடைபிடியுங்கள்.
*ஒன்றுபட்ட கூட்டத்தினர் மீதே அல்லாஹ்வின் உதவி இருந்து கொண்டே இருக்கின்றது. நீங்கள் ஒன்றுபட்டவர்களாக ஆகி விடுங்கள்.
* நோய் என்பது இறைவனின் சோதனையாகும். அதனைக் கொண்டு அடியார்களை பரிசுத்தப்படுத்துகின்றான்.
* பரிசுத்த நினைவின் காரணமாக எத்தனையோ சிறிய நன்மைகள் பெரிய நன்மைகளாக மாறி விடுகின்றன.
* அழகிய முறையில் எவர் கடனைத் திருப்பித் தருகிறாரோ அவர் தான் உங்களில் மேலானவர்.
- நபிகள் பொன்மொழிகள்