கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கஞ்சா விற்ற கும்பல் மடக்கி பிடித்த காவல்துறை 9 பேர் கைது

26 September 2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கஞ்சா விற்ற கும்பல் மடக்கி பிடித்த காவல்துறை 9 பேர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் அவர்களின் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில் உளுந்தூர்பேட்டை வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்வாணன் அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் அருள்செல்வன் சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தேவநாதன் மணிகண்ட பெருமாள் சிவானந்தம் சந்தோஷ் முதல் நிலை காவலர் ராஜசேகர் தனி பிரிவு முதல் நிலை காவலர் சரவணன் ஆயுதபட காவலர் ராம்குமார் ஆகியோர் உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் காலை 5.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை கந்தசாமிபுரம் ராமகிருஷ்ணா சிபிஎஸ்சி பள்ளியை அடுத்துள்ள இடுகாடு அருகில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கண்காணித்துக் கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமான வகையில் கும்பலாக ஒரு கார் மற்றும் ஐந்து இருசக்கர வாகனங்களுடன் நின்று கொண்டிருந்த ஒன்பது நபர்களும் போலீசாரை கண்டதும் ஓட முயற்சித்தபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது ஒரு பாலித்தீன் பையில் சுமார் இரண்டு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது அவர்களை கைது செய்து விசாரணை செய்யப்பட்டது  1.ரமேஷ் வ/28 தா/பெ முருகவேல் எம்ஜிஆர் நகர் உளுந்தூர்பேட்டை 2.விஜய் வ/24  தா/பெ வீரப்பன் விகேஎஸ் கார்டன் உளுந்தூர்பேட்டை 3.மணிராஜ் வ/26   தா/பெ சிவகுமார் கிழக்கு கந்தசாமிபுரம் உளுந்தூர்பேட்டை 4.நாராயணன் வ/29  தா/பெ சங்கர் அன்னை சத்யா தெரு உளுந்தூர்பேட்டை 5.மணிகண்டன் வ/36 தா/பெ பால்ராஜ் சந்தப்பேட்டை மங்கலம்பேட்டை 6.மோகன்ராஜ் வ/26 தா/பெ ராஜேந்திரன் மணிக்கூண்டு தெரு உளுந்தூர்பேட்டை  7.மேப்டவுன் வ/29  தா/பெ பாண்டியன் பாத்திமா நகர் உளுந்தூர்பேட்டை 8.அருண்குமார் வ/19  தா/பெ செல்வகுமார் அன்னை சத்யா தெரு உளுந்தூர்பேட்டை 9.சையத் மூமின் வ/29 தா/பெ உசேன் மெயின் ரோடு எலவனாசூர்கோட்டை என தெரிய வந்தது மேற்படி நபர்கள் பொறியியல் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் என்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு அதன் மூலம் அதிக பணம் சம்பாதித்து வாங்கிய ஒரு ஸ்கோடா கார் மற்றும் ஐந்து விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேற்படி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 20000 அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும் மேற்படி சம்பவம் தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலைய குற்ற எண் 456/2022 U/S 294(b)  353, 506 (2) IPC r/w 8(c) 20(b)ll(c) NDPS ACT இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொற்றவை செய்திகளுக்காக இரா.வெங்கடேசன் கள்ளக்குறிச்சிமாவட்டம்