பகுதி நேர ரேஷன் கடை கேட்டு காத்திருக்கும் போராட்டம்...

04 January 2023

பகுதி நேர ரேஷன் கடை  கேட்டு காத்திருக்கும் போராட்டம்...

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியம் உ.செல்லூர் தலித் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பகுதி நேர நியாய விலை கடை கேட்டு மனு கொடுத்தும் செவி சாய்க்காமல் காலம் கடத்தும் அதிகாரிகளை கண்டித்து, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் காத்திருக்கும் போராட்டம் இன்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கிளை தலைவர் ஏழுமலை, கிளை செயலாளர் வீரன் தலைமையில் நடைபெற்றது...

இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் பி சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் அ.பா. பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் 
டி.எம்.ஜெய்சங்கர், சிஐடியு மாவட்ட செயலாளர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.செந்தில், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.தேவி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்

ஒன்றிய செயலாளர் கே ஆனந்தராஜ், ஒன்றிய தலைவர் எம்.ராஜீவ் காந்தி, விசா ஒன்றிய தலைவர் அய்யனார், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கிளை செயலாளர் 
வி.சுரேஷ், ஒன்றிய நிர்வாகிகள் 
எஸ்.மணிகண்டன், 
பி.சுப்பிரமணி, 
கே.சிவபெருமான், 
கே.அரசலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள்  
குமாரகிருஷ்ணன்,  சக்திவேல், சிவா மற்றும் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த காத்திருக்கும் போராட்டத்தில் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் இங்கேயே சமைத்து சாப்பிட்டு தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்போம் என்று தெரிவித்தனர்...

கொற்றவை செய்திகளுக்காக
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் /சப்எடிட்டர்