சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு - புகழேந்தி கட்சியிலிருந்து நீக்கம்!

14 June 2021

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார் என்ற ஆலோசனை இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 


நடைபெற்ற கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர், கொறடா, உள்ளிட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தேர்வு; கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு; துணை கொறடாவாக சு.ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கே.பி.அன்பழகன், துணை செயலாளராக மனோஜ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

துணை கொறடாவாக சு.ரவி, பொருளாளராக கடம்பூர் ராஜு, செயலாளராக கே.பி.அன்பழகன், துணை செயலாளராக மனோஜ் பாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடி கட்சி வளர்ச்சிக்கும், புகழுக்கும்; இழுக்கும், பழியும் தேடியவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் - அதிமுக தலைமைக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் வேண்டுகோள்

"உழைப்பை சுரண்டும் ஒட்டுண்ணிகள், நற்பெயரை அழிக்கும் நச்சுக்களை” - சசிகலா மீது அதிமுக கடும் விமர்சனம்

இந்தக் கூட்டத்தில் மேலும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு சில தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் அதிமுக செய்தித்தொடர்பாளர் புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ். - இ.பி.எஸ் கூட்டாக அறிவித்தனர்.

அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமகவை விமர்சித்து புகழேந்தி நேற்று பேட்டியளித்த நிலையில், இன்று கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை என அறிவிப்பு.