வேப்பனப்பள்ளி அருகே 5 ஆண்டுகளாக சாலை வசதி கிடப்பில் போடப்பட்டுள்ள அவலம்.......

12 July 2021


கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட நாடு வணபள்ளி ஊராட்சியை சேர்ந்த குக்கிராமம் (அத்தி குண்டா )ராமோஜிபுரம். இக்கிராமம் கிருஷ்ணகிரி வேப்பனப்பள்ளி மாநில நெடுஞ்சாலையில் அருகில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு சாலை வசதி கேட்டு கடந்த அதிமுக ஆட்சியில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பரிசீலித்த அதிகாரிகள் சாலை பணிக்காக டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே சாலை பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்தும் பணிகள் மேற்கொள்ளவில்லை. கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை இதுதொடர்பாக அணுகியும் எந்த பலனும் இல்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இப்பகுதியில் வாழும் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள்,
குழந்தைகள்,மாணவர்கள், பெரியோர்கள், என அனைத்து பொதுமக்களும் மருத்துவ சேவைக்கு, பேருந்து சேவைக்கும் செல்ல மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டியிருக்கிறது. ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ள சாலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது விபத்து ஏற்படுவதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.எனவே அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் ஐந்து ஆண்டுகளாக சாலை வசதிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு விரைந்து சாலை பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர் வேப்பனபள்ளி.
 மகேந்திரன்