ஓவர் அலப்பறை பண்ணும் நெல்சன் திலீப்குமார்..

17 January 2022

சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றியையும், புகழையும் பார்க்கும் பிரபலங்கள் சற்று அதிகப்படியான கெத்து காட்டுவது வழக்கமான ஒன்றுதான்.

அந்த வகையில் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பில் கோலமாவு கோகிலா என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார்.இந்தத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வரை வசூல் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது தளபதி விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் நெல்சன் இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே அந்த முழு பட்ஜெட்டும் காலி செய்து விட்டாராம்.இதனால் சன் பிக்சர்ஸ் மீதமிருக்கும் படப்பிடிப்பிற்கு 20 கோடி வரை எக்ஸ்ட்ரா செலவு செய்துள்ளது. இப்படி அதிகமாக செலவான காரணத்தால் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் நெல்சன் மீது தற்போது கடும் கோபத்தில் இருக்கிறதாம். இது தவிர படப்பிடிப்பு தளத்திலும் அவர் ஓவர் கெத்து காட்டி வருகிறாராம்.மேலும் அவர் படத்தின் படப்பிடிப்புக்கு மிகவும் தாமதமாகத்தான் வருகிறாராம். இவருக்கு முன்னரே ஷூட்டிங்கிற்கு வந்துவிடும் நடிகர் விஜய் இயக்குனருக்காக அதிக நேரம் காத்திருக்கிறாராம். இதனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் மீது அனைவரும் கடும் அதிருப்தியில் இருந்துள்ளனர்.டாக்டர் படத்தின் அமோக வெற்றி தான் நெல்சனின் இந்த நடவடிக்கைகளுக்கு காரணம் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். இரண்டு படம் வெற்றி பெற்றதற்கே இவ்வளவு ஆட்டமா என்று நெல்சன் குறித்து கோடம்பாக்கத்தில் பலரும் கிசுகிசுத்து வருகின்றனர்.