அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி திமுகவினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

15 October 2020

தஞ்சை அடுத்த செங்கிப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி முன்பு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை கண்டித்தும் அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வும் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிடம் தாரை வார்த்து நீட் தேர்வை கொண்டுவந்து ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை கலைத்தது போல பொறியாளர் கனவை கலைக்க நினைப்பதாகவும் இவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி முன்பு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி செழியன் துரை சந்திரசேகரன் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துணைவேந்தர் தூரப்பார்வை பதவி நீக்கம் செய்யும் வரை பொறியியல் கல்லூரி மற்றும் அனைத்து அரசு கல்லூரி முன்பு மாணவர்கள் தொடர் போராட்டம் செய்யப்போவதாகவும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷத்தை எழுப்பினர்.