தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவ பொம்மையை எரித்த திமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது.

20 November 2020

நாகை மாவட்டம் திருக்குவளையில் இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து மாநிலம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர் அண்ணாசிலை அருகே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையை எரித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.