முகப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தல் : காவேரி மருத்துவமனை தகவல்
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த செவாய்க்கிழமை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தனிமைப்படுத்திக் கொண்டார் இந்த நிலையில் 2 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டிருந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது ,அதில் கூறப்பட்டுள்ளதாவது;
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் விரைந்து குணமடைந்து வருகிறார்,அவர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.என காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.