சூடான நீரில் இஞ்சியை கலந்து குடித்து வாருங்கள்! கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
15 October 2021
இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை” என்பது பழமொழி, அப்பேற்பட்ட இஞ்சி நம் சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இஞ்சி உணவு செரிமானத்திற்கு உதவும் ஒரு முக்கிய உணவுப் பொருளாகும்.
மருத்துவ உலகில் நோய்க்கு தீர்வளிக்கும் அனைத்து மருந்துகளிலும் இஞ்சி இடம் பெறுகிறது.
இஞ்சி நறுமணத்திர்க்காகவும் சமையலில் உணவின் ருசியை அதிகரிக்கவும் பெரிதும் உதவுகிறது. இதனை தினமும்ட காலையில் சூடான நீரில் கலந்து குடிப்பதனால் உடலுக்கு இன்னும் பல பயன்களை தருகின்றது. தற்போது அவை எப்படி என்ன என்பதை பார்ப்போம்.
தினமும் காலையில் இஞ்சியை சூடான தண்ணீரில் சேர்த்து சற்று நேரம் வேகவைத்து வெறும் வயிற்றில் குடிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.
2 கப் தண்ணீரில், 4 முதல் 6 தோல் நீக்கிய இஞ்சி துண்டுகளை போட்டு 20 நிமிடம் கொதிக்க வைத்து அதனுடன் தேன் அல்லது பணங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் மனதுக்கு புத்துணர்ச்சி அடைவதோடு உங்கள் உடலுக்கும், பல வலிகளுக்கு தீர்வாக அமைகிறது.
இஞ்சியில் மிக சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இது வயிறு சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் குமட்டல் இதிலிருந்தும் விடுபடலாம்.
இஞ்சியை இதயத்தின் நண்பன் என்று கூறுவார்கள். இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த நீரைப் பருகுவது மிகவும் நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பை குறைக்க இது சிறந்த தீர்வாக அமைகிறது.
மாரடைப்பு அபாயங்களை குறைப்பதற்கும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் மிகவும் முக்கியமாக இஞ்சி தேநீர் பயன்படுகின்றது. மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக அளவு ஏற்படும் வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக இந்த தேநீர்