பரம்பிக்குளம் அணையில் அமைச்சர் ஆய்வு

02 November 2022

கோவை மற்றும் திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் ஆகும். இத்திட்டத்தின் பிரதான அணையான பரம்பிக்குளம் அணையில் உள்ள மூன்று மதகுகளில், 2வது இருந்த மதகு கடந்த செப்டம்பர் 21ம் தேதி நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக உடைந்தது. இதனால் அணையிலிருந்து சுமார் 5. 7டிஎம்சி தண்ணீர் அணையில் இருந்து வெளியேறி கேரளா வழியாக கடலில் சென்று கலந்தது. தகவல் அறிந்ததும் தமிழக நீர் பாசன துறை அமைச்சர் துரைமுருகன், மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டதோடு தமிழக முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். அமைச்சர் முன்னிலையில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தபட்ட பிறகு உடைந்த மதகை புதுப்பிக்க தமிழக முதல்வர் ரூ 7 கோடியே 20 லட்சம் நிதியை உடனடியாக ஒதுக்கினார். இதனையடுத்து அணைக்கான மதகு தயாரித்தல், அணையில் மதகு பெருத்தும் இடத்தில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று அய்வு மேற்க்கொண்டார். இம்மாதம் 20ம் தேதிக்குள் பணிகளை முழுமையாக முடிக்க திட்டமிட்டு, பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் ஒரு சொட்டு தண்ணீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவாதகவும் பணிகள் முழுமை அடைந்ததும் கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு விவசாயத்திற்கும் குடிநீர் தேவைகளுக்கும் முறையாக தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப் படும் என்றார். இவ் ஆய்வின் போது தலைமை பொறியாளர் முத்துசாமி, செயற்பொறியாளர் நரேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


G. கவி பிரசாந்த்
கொற்றவை செய்தியாளர்
கோவை மாவட்டம்
பொள்ளாச்சி