தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று "மேலதிருச்செந்தூர் பள்ளி மாணவி துர்கா சாதனை"

20 June 2022

தமிழகத்திலேயே முதன்முதலாக 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று "மேலதிருச்செந்தூர் பள்ளி மாணவி துர்கா சாதனை"

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள மேலதிருச்செந்தூரில் அமைந்துள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவியான துர்கா தமிழகத்திலேயே முதன்முதலாக 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது சொந்த ஊர் குரும்பூர் அருகிலுள்ள குரூகாட்டூர் ஆகும். மாணவியின் தந்தை செல்வகுமார் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். மகிழ்ச்சியில் மாணவியை காஞ்சி சங்கரா பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.