திருவாரூரில் ம.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

15 September 2021திருவாரூரில் ம.தி.மு.க.சார்பில் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


திருவாரூர் மாவட்டம் திருவாரூர்  நகர, ஒன்றிய மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் திருவாரூரில் உள்ள பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின்  113-வது பிறந்த நாளை  முன்னிட்டு  அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .
       இதில் மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் ஆரூர்சீனிவாசன்,  நகர செயலாளர் ஏ .கே. எம். கபிலன்,  ஒன்றிய செயலாளர் டி. ஆர் .தமிழ்வாணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கமல வேந்தன்,  முன்னாள் நகர செயலாளர் ஜெயராமன் , மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேஷ் , அலிவலம் ராஜ் கழக மூத்த முன்னோடி வெங்கட்ராஜூலு,  அரசவனங்காடு சிவகுரு, மற்றும் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளான ம.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

*நிருபர் மீனா திருவாரூர்*