கொற்றவை விருதுகள் 2022-23

16 November 2022

கொற்றவை விருதுகள் 2022-23

ஒவ்வொரு ஆண்டும் பல்துறைகளில் சாதனை புரிந்து வரும் சாதனையாளர்களை கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கொற்றவை விருதுகள் வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கொற்றவை விருதுகள் 2022 வழங்கும் விழா 
16.11.2022 அன்று சென்னை மயிலாப்பூர் ஹோட்டல் கற்பகம் இன்டர்நேஷனல் மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.. 

விழாவிற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது, 

கொற்றவை குழும நிர்வாக இயக்குனர் டாக்டர்.கொற்றவை நாகராஜன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை 
தா.வேலு, குளோபல் ஃபேஸ் யுனிவர்சிட்டி நிர்வாகி மற்றும் திரைப்பட நடிகர் அருள்மணி, தொழிலதிபர் வழக்கறிஞர் ரமணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கொற்றவை நியூஸ் துணை ஆசிரியர் 
இரா.வெங்கடேசன் வரவேற்பு
உரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் 11 நபர்களுக்கு மதிப்பு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது, அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சேவைபுரிந்தவர்கள், சாதனை படைத்தவர்கள் சுமார் 60 பேருக்கு சாதனையாளர், கவிச்சுடர், சிலம்பாட்ட வீரர், சமூக சேவகர், தொழில் முனைவோர், ஆகிய விருதுகள் வழங்கப்பட்டது, இந்த விருதுகள் விழாவில் 200க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்கள் பங்கேற்றனர்...

இரா.வெங்கடேசன்
சப்எடிட்டர் 
கொற்றவை நியூஸ்