விக்ரம் படப்பிடிப்பு தொடக்கம் - படப்பிடிப்பு பூஜையில் பங்கேற்ற கமல்

17 July 2021


இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ள நிலையில், முதல் நாள் படப்பிடிப்பு பள்ளிக்கால நண்பர்களை மீண்டும் சந்தித்தது போன்ற உணர்வை ஏற்படுத்துவதாக கமல்ஹாசன் கூறி உள்ளார். மேலும்,திரைத்துறையை சார்ந்த அனைவரையும் படப்பிடிப்பு பணிகளுக்கு அழைப்பதாகவும் அவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.