வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

08 April 2021


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஜெகவீரன் பட்டியில் வீட்டின் முன்பு கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு .

ஜெகவீரன் பட்டியை சேர்ந்த மகேந்திரனின் மனைவி உஷாதேவி(25) இவர் இன்று காலை தனது வீட்டின் முன்பு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சென்ற இரண்டு மர்ம நபர்கள் உஷாதேவியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்க நகையை பறித்துள்ளனர்.

அதில் உஷாதேவி சுதாரித்துக் கொண்டு நகையை பிடித்ததில் அரை பவுன் நகையை மட்டும் மர்ம நபர்கள் பரித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து உஷாதேவி ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் தப்பிச் சென்ற இரண்டு மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சாத்தூர்
க.அருண் பாண்டியன்.