அமெரிக்காவில் இதுவரை 16.1 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக தகவல்

04 April 2021

அமெரிக்காவில் மாடர்னா மற்றும் பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன்&ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 16,16,88,422 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் 2-ந் தேதி வெளியான தகவலின்படி மொத்தம் 15,76,06,463 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நாட்டின் அனைத்து தடுப்பூசி செலுத்தும் மையங்களிலும் தொடர்ச்சியாக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டு அதிக அலவிலான மக்களுக்கு மருத்தை கொண்டு சேர்க்க முயன்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.