ஆப்கானிஸ்தானில் நிலைமை மாறியுள்ளதால் இந்தியா உஷாராக இறுக்கிறது.

31 August 2021

ஆப்கானிஸ்தானில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி முறையில் பங்கேற்று பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆப்கானிஸ்தானில் நிலைமை மாறியுள்ளதால் இந்தியா உஷாராக இருப்பதாகவும் எது போன்ற சூழலையும் சந்திக்க தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சூழலை பயன்படுத்தி இந்தியாவில் பயங்கரவாதத்தை தூண்டிவிடும் செயல்களை அனுமதிக்க மாட்டோம் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் நாளையுடன் முழுமையும் வெளியேறுகின்றன. இதற்கு பின் ஏற்பட வாய்ப்புள்ள சூழல்கள் குறித்து பிரிட்டன், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்த உள்ளது