பிரபல உணவகத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

28 May 2022

கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை.கோவை ஆனந்தாஸ் உணவாக குழுமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வடவள்ளி, காந்திபுரம், லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உணவகங்களில் வருமானவரித்துறை சோதனை மேற்கொள்கிறது. மேலும் அனந்தாஸ் உணவக உரிமையாளர் மணிகண்டனின் இல்லத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.