சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101 -ஐ தாண்டியுள்ளது

08 October 2021

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.101 -ஐ தாண்டியுள்ளது.

நேற்றைவிட 26 காசு உயர்ந்திருக்கும் பெட்ரோலின் விலை, ரூ.101.01 க்கு இன்று சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை, 34 காசு அதிகரித்து ரூ.96.60 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பெட்ரோல் விலை சில மாதங்களுக்கு முன் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்த நிலையில் மாநில அரசு வரிகள் வகையில் 3 ரூபாய் குறைத்தது. இதனால் அதன் விலை 100 ரூபாய்க்கு கீழ் குறைந்தது. தற்போது மீண்டும் 100 ரூபாயை பெட்ரோல் விலை கடந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ளதே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.