குடும்ப வறுமையின் காரணமாக கணவன் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி.

15 September 2021திருச்சி தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (51) இவரது மனைவி மகாலட்சுமி (49).
இவர்கள் தில்லை நகர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாழ்ந்து  வந்துள்ளனர்.

உணவிற்கு வழியின்றி வாழ்க்கை நடத்தி வந்த நிலையில்  இன்று இருவரும் வீட்டிலேயே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  வந்து அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர்.அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.