நான்கு மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு

17 October 2020

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (அக்.17) பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய 13 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் சனிக்கிழமை (அக்.17) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.