பென்ஸ் கார் கொடுக்கும் பிரபல நிறுவனம்!!

22 July 2021


பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் மிக சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளது. 


உலகளவில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆட்டோமேஷன் சேவையை அதிகப்படுத்தத் துவங்கி அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. இதனால் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறாமல் இருக்கவும் திறன் வாய்ந்த ஊழியர்களைத் தக்க வைக்கவும் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஊழியர்களுக்கு சிறப்பு பரிசுகளையும், ஊக்கத்தொகையும் வழங்கவுள்ளது. 

இதுகுறித்து ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றால் கட்டாயம் 20% அதிகத் தொகையைச் செலவிட வேண்டியுள்ளது. எனவே இதைக் குறைக்க சிறப்பாக பணிபுரியும் பணியாளர்களுக்கு மெர்சிடிஸ் பென்ஸ் காரை பரிசாக தர திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.