குஸ்பு பாஜகவில் இணைந்தது கூட்டணிக்கு பலமாக அமையும்

14 October 2020

குஷ்பு பாஜகவில் இணைந்தது  கூட்டணிக்கு பலமாக அமையும், 

அதிமுக தேர்தல் களத்தில் முதலில் உள்ளது, தேர்தல் அறிக்கை என்பது கட்சியின் பொக்கிஷம், தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும், மதுரையில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.

உலகளாவிய தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி குறித்து உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு 2020 இணைய வழியில் 14 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது, இம்மாநாட்டை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையிலிருந்து
தொடங்கி வைத்தார், மாநாட்டை தொடங்கி வைத்த பின் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் "உலகளாவிய அளவில் தகவல் தொழில்நுட்பத்துறை மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது, தகவல் தொழில்நுட்பத்துறை மாநாடு ஒரு மைல் கல்லாக அமையும், தமிழக அரசு நிர்வாகத்தை முழுமையாக டிஜிட்டல் முறையில் கொண்டு வர நடவடிக்கை, தமிழகத்தில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு வருகிறது,

பண்டிகை காலங்களை மக்கள் மிக கவனமாக கையால வேண்டும், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன, மருந்து கண்டுபிடிக்கும் வரையில் கொரைனா கொடிய நோயாக உள்ளது, கொரைனாவை எதிர் கொள்வதில் விவேகம் மிக முக்கியம், தகவல் தொழில்நுட்பத்துறையில் உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்குவதாக தகவல், 38 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது, தென் மேற்கு பருவமழை கூடுதலாக 24 சதவீதம் கிடைத்துள்ளது, கூடுதல் மழையால் விவசாய பணிகள் நடைபெறுகிறது, நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவில் நல்லதே நடக்கும், நடிகை குஷ்பூ பாஜகவில் சேர்ந்த காரணம் குறித்து அவரே சொல்லி விட்டார், கூட்டணிக்கு பலரும் வருவது கூட்டணிக்கு பலமாக அமையும்,

வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க நீர் நிலைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மண்டல அளவில் குழுக்கள் அமைப்பு, தென் மாவட்டங்களில் மிதமான மழையும், வட மாவட்டங்களில் கூடுதலாக மழை இருக்கும், கடலோர மாவட்டங்கள், மலை பிரதேசங்களில் கூடுதல் கவனம் செலுத்துகிறது, அதிமுக வழிகாட்டுதல் குழுவை அமைத்த பிறகு திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து உள்ளது, அதிமுக தேர்தல் களத்தில் முதலில் உள்ளது, தேர்தல் அறிக்கை என்பது அக்கட்சியின் பொக்கிஷம், தேர்தல் அறிக்கை மக்களை ஈர்க்கும், துணை வேந்தர் சூரப்பா ஜனநாயக ரீதியில் மரபு சார்ந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும், தேர்தல் காலங்களில் அனைத்து விஷயங்கள் சர்சையாக்கபடுகிறது, உரிமைகள் பாதிக்காத வண்ணம் வளர்ச்சியை பெற வேண்டும்" என கூறினார்.