சர்க்கரை நோயை அடியோடு விரட்ட ஆவாரம் பூ சூப்

28 October 2020

ஆவாரம் பூ சூப் செய்ய தேவையான பொருட்கள்:

ஆவாரம்பூ - ஒரு கைப்பிடி
மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
பூண்டு - ஐந்து பல்
சின்ன வெங்காயம் - 6
சீரகம் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
தக்காளி - ஒன்று
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

ஆவாரம் பூக்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டை நசுக்கிப் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், தக்காளி மஞ்சள்தூள், உப்பு இவற்றுடன் ஆவாரம் பூவை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை கொதிக்க விடவும்

பிறகு வடிகட்டி குடிக்கவும். அதிலுள்ள ஆவாரம்பூவை மென்று விழுங்கினால் பற்களின் இடையில் உள்ள கிருமிகள் மாயமாக மறைந்துவிடும். பல் வலுப்பெற்று ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.