இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதியமைச்சர் ராஜினாமா!

06 July 2022

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிதியமைச்சர் ராஜினாமா இங்கிலாந்து நிதியமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சியின் கொறடாவாக கிறிஸ் செயல்பட்டு வந்தார். இவர் மீதான, பாலியல் குற்றச்சாட்டுகள் விவகாரத்தை, அரசு சரியாக கையாளவில்லை எனக் கூறி, அமைச்சரவையில் இருந்து தனது பதவியை ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். மேலும், சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித்தும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.