திருச்சிராப்பள்ளி ராயல் ரோட்டரி சங்கம் சார்பாக நடத்திய குடும்ப சந்திப்பு விழா

07 February 2021

திருச்சிராப்பள்ளி ராயல் ரோட்டரி சங்கம் சார்பாக நடத்திய குடும்ப சந்திப்பு விழா

திருச்சிராப்பள்ளி குழுமணி ரோடு மகாலட்சுமி கார்டனில் மிக சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் சாமுத்ரி அகாடமி வழங்கும் பரதநாட்டியமும் ஸ்ரீ மாதங்கி நாட்டியாலயா வழங்கிய சிறுவர்கள் பங்குபெறும் பரதநாட்டியமும் நடைபெற்றது புதுக்கோட்டை சரவணன் நதியா குழுவினர் வழங்கும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் பல்சுவை கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி உதவி போலீஸ் கமிஷனர் திரு   முருகேசன் அவர்கள் ஆடல் பாடல் உள்ளிட்ட  பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார் மேலும் சின்னத்திரை நடிகர் முனீஸ்ராஜ் அவர்களும் சிறப்பு அழைப்பாளராக ரோட்டரி மாவட்ட மூவாயிரத்தில் வருங்கால ஆளுநர் ஆனந்த ஜோதி அவர்களும் டிஸ்ட்ரிக்ட் செகரட்டரி ஆர் ராஜா கோவிந்தசாமி அவர்களும் டிஸ்ட்ரிக்ட் சேர்மன் ஆர் பி எஸ் மணி அவர்களும் விழாவில் கலந்து கொண்டனர் இவ்விழாவில் மியாகி பாரஸ்ட் மரம் வளர்ப்பு திட்டத்திற்காக 100 மரக்கன்றுகள் வழங்குவதற்காக பணம் கொடுக்கப்பட்டது மற்றும் ரோட்டரி  நிதியாக ரூபாய் 10,000 ராஜா கோவிந்தசாமி அவரிடமும் வழங்கப்பட்டது விழாவில் ராயல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ் பிரகாஷ் அவர்களின்11வது ஆண்டு  திருமண விழா மேடையில் சிறப்பாக நடைபெற்றது  தலைவர் அவர்களின் மகன் ஜெய் கிஷோர் சாஸ்தா அவர்களின்  பிறந்தநாள் விழா வும் நடைபெற்றது   ரோட்டரி மூவாயிரத்தில் துணை ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராயல் ரோட்டரி சங்கத்தின் பட்டய தலைவர் முருகானந்தம் அவர்களுக்கு இவ்விழாவில் கௌரவ படுத்தப்பட்டது இவ்விழாவில் ராயல் ரோட்டரி சங்கத்தின் ப்ராஜெக்ட் சேர்மன் இன்ஜினியர் ராஜாராம் மற்றும்  விஜயகுமார் அவர்களும் இவ்விழாவிற்கான முதன்மை தலைவர் சுசீந்தர்  அவர்களும் மற்றும் அனைத்து ரோட்டரி சங்க தலைவர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் இவ்விழாவின் நன்றி  உரை ரொட்ரேரியன் இற்சாத் அலி அகமட் அவர்கள் நன்றியுரை வழங்கினார் நிகழ்ச்சியில் திருச்சி அப்பல்லோ மருத்துவ பண்ணை சார்பாக இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.