தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையின் நிறுவனர் தலைவர் மீது பொய்யான வழக்கு? கண்டித்து ஆர்ப்பாட்டம்

07 October 2021

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபை யின் நிறுவனர் தலைவர் மீது காவல்துறையினர் பொய்யான வழக்கு போடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையில் மதுரை மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது பாண்டி ஜோதி கூறியதாவது  தமிழக முதல்வர் ஆணையின் பேரில் தமிழக காவல்துறையினர் சைலேந்திர பாபு அவர்களின் தலைமையிலான தமிழக காவல்துறையினர் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள கூலிப்படையினர் மற்றும் ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்இந்த நிலையில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையில் பொறுப்பாளர்கள் தமிழகத்தில் எந்த  பகுதியிலும்  சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை இந்த நிலையில் மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் ஆய்வாளரின் நடவடிக்கையின் பேரில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் சபையின் நிறுவனத் தலைவர் ராமர் பாண்டி மற்றும் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் விட்டின் கதவை உடைத்து காவல்துறையினர் சேதப்படுத்தி விட்டதாகவும்  காவல்துறையே ஆயுதங்களை எடுத்து  வந்து வீட்டுக்குள் வைத்து விட்டு பொய்யான வழக்கு போடுவதாகவும் கூறினர் காவல்துறையினர் பொய்யான வழக்கு பதிவு செய்யக் கூடாது வழக்கு பதிவு செய்து அதை வாபஸ் பெற வேண்டும் இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர்