எஸ்கேப் லைவ் வெப் சீரிஸ் - திரைப்பாபார்வை

20 May 2022

இயக்குனர் சித்தார்த் குமார் திவாரி இயக்கத்தில் வந்துள்ள இணையத்தொடர் எஸ்கேப் லைவ் . இந்த இணையத் தொடரில் ஸ்வேதா திரிபாதி , பிளபிதா போர்தாகூர் , ஸ்வஸ்திகா முகர்ஜி மற்றும் நடிகர் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார். இந்த படத்தின் கதை பொழுதுபோக்கு மொபைல் ஆப் ஒன்று திறமைகளை வளர்ப்பது , பொழுதுபோக்கு என்று கூறி ஒரு போட்டி ஒன்றினை அறிவிக்கிறது. இந்த போட்டியில் ஒரு சிறுமி உட்பட  ஆறு  வெவ்வேறு போட்டியாளர்கள் பங்கேற்க்கின்றனர். 30 நாட்களில் யார் அதிகம் பார்வையாளர்கள், டைமன்ட்கள் பெருகிறார்களோ அவர்களுக்கு 3 கோடி பரிசுத் தொகையாக அறிவிக்கின்றனர். அதற்காக திறமை என்ற பெயரில் அந்த ஆறு பேர் கோமாளித்தனமான, மூடத்தனமாக என்ன செய்கிறார்கள் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தான் மீதிக்கதை. சோசியல் மீடியா திரில்லர் என்ற வடிவில் இது உருவாகி உள்ளது. 


இது கற்பனை கதை என்று கடந்து சென்று விட முடியாது, காரணம் கிட்ட தட்ட இந்தியாவில் நடந்த சம்பவங்கள் குறிப்பாக தமிழகத்தில் நடந்துக்கொண்டிருக்கும் சம்பவத்தை தான் அப்படியே பிரதிபலித்துள்ளதாக பார்க்க முடிகிறது. dubsmash , musically வந்த புதிதில் facebook,instagram போல சாதாரணமாக ஒரு பொழுதுபோக்கு    ஆப் என்று நினைத்தார்கள்.ஆனால் அதன் பிறகு வந்த tik tok இந்த எல்லைகளை கடந்து நாங்களும், எங்களது  திறமைகளை காட்டுகிறோம் பாருங்கள் என ஒரு கூட்டம் கிளம்பியது. போட்டிக்கு போட்டியாக வீடியோ போடுவது ஒருவரை ஒருவர் வசைபாடுவது ஆபாசமாக நடனமாடுவது இதை எல்லாம் என்னுடைய திறமையை வெளிபடுத்தும் ஒரு வாய்ப்பு என் தங்கம் என் உரிமை என்ற அளவுக்கு பில்டப் செய்து பேசியது எல்லாம் வரலாற்றில் இன்றும் உள்ளது. இந்த இணையத்தொடரில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையாகவே தமிழகத்தில் இன்றும் உலாவுகின்றன காத்து கருப்பு கலை , திருச்சி சாதனா , ரவுடி பேபி சூர்யா , ஜி.பி.முத்து, இலக்கியா , திவ்யா கள்ளச்சி , தேனி சுகந்தி , வணக்கமுங்கோ ஷீலா , சேலம் மணி என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். இவர்களை பெரிய நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திவிட்டது ,நண்டு சுண்டு youtube சேனல்கள் ஆபாச டைட்டில் , அதிக பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்ற ஒரு கேவலமான நோக்கத்திற்காக இது போன்ற கழிசடைகளை நடமாட தொடங்கின. இது போதாது என்று 2k கிட்ஸ் என்ற பெயரில் சில நண்டு சிண்டுகள் முளைக்க தொடங்கியது.அதில் நறுக்கப்பட்டது தான் குட்டி வடிவேலு என்ற  பொடியன் பள்ளிப்பெண்ணுடன் டிக் டாக் வீடியோ போட்டு 90s கிட்ஸ்களின் சாபத்தின் பேரிலும் புகாரின் பேரில் காவல்துறை அழைத்து செல்லமாக கொஞ்சி அனுப்பியதில் தற்போது youtube தளம் தப்பித்தது.


tik tok போன்ற செயலிகளுக்கு பின்னால் நடக்கும் வியாபாரத்தை கனகச்சிதமாக இயக்குனர் வெளிபடுத்தி உள்ளார். லைக்ஸ் மற்றும் டைமென்ட்க்காக இருவரை மோத விடுவது,அதற்காக அவர்கள் செய்யும் மூடத்தனத்தால் பாதிப்புக்குள்ளான பிறகும் அவர்களை தொடர்ந்து வீடியோ செய்யும் படி வற்புறுத்துவது என பல உண்மை சம்பவங்கள் அப்படியே இதில் பிரதிபலித்துள்ளது என்று கூறலாம்.  ஒரு டான்ஸ் நிகழ்ச்சியில் சிறுமி என்று கூறிய காரணத்தால் பெரிய பெண்ணாக மாறவேண்டும் சிறுமி கூறும் விளையாட்டுத்தனமான பேச்சைக்கொண்டு பெரிய பெண்ணாக மாறுவதற்க்காக ஊசி செலுத்திக்கொள்வது என சிறுமி இதற்கு அடிமையாவது , தவறான பாதைக்கு செல்வது என தமிழகத்தில் மாணவர்களின் எதிர்காலம் எதை நோக்கி செல்கிறது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.


இந்த இணையத்தொடர் ஓடிடி தளமான டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதை கடைசி வரைக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. மொத்தம் 7 எபிசோடுகள் 7வது எபிசோடில் அடுத்த சீசனுக்கும் தொடர்ச்சி விட்டு சென்றிருக்கிறார் இயக்குனர் சித்தார்த் குமார் திவாரி.