இங்கிலாந்தில் 12 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி !

06 June 2021

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தில் 12 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நாடுகளும் பல வகையான தடுப்பூசிகளை செலுத்தி வந்தாலும் பல நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து பல நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து இங்கிலாந்தும் 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசியை செலுத்த அனுமதி அளித்துள்ளது.