ரூ.180 கோடியில் திட்டம்:ஈ.சி.ஆர் - ஓ.எம்.ஆர் சாலைகளை இணைக்க மேம்பாலம்

30 November 2022

சென்னையிலிருந்து புதுவை செல்ல ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இரண்டு பாதைகள் இருக்கும் நிலையில் இந்த இரண்டு பாதைகளை சென்னையுடன் இணைக்க மேம்பாலம் கட்ட வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறதுஇந்த நிலையில் சென்னையில் இருந்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் வகையில் ரூபாய் 180 கோடி ரூபாய் செலவில் புதிய மேம்பாலம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதுஇதற்கான மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து விரைவில் சென்னையிலிருந்து ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை இணைக்க புதிய மேம்பாலங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது இதனால் போக்குவரத்து சீராகும் என்றும், வாகன ஓட்டிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது