வேங்கைவயல் விவகாரம் உளுந்தூர்பேட்டையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

21 January 2023

வேங்கைவயல் விவகாரம் உளுந்தூர்பேட்டையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்... 

உளுந்தூர்பேட்டை ஜன-21

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி தலித் மக்கள் குடிக்கும் தண்ணீரில் மலத்தை கலந்த நபர்களை கைது செய்யாத காவல்துறையை கண்டித்தும் தீண்டாமையின் அடையாளமாக இருக்கின்ற குடிநீர் தொட்டியை இடிக்க வலியுறுத்தி இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த சென்றவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்த காவல்துறையை கண்டித்தும் கைது செய்யப்பட்ட வாலிபர் சங்கத்தினரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நகர செயலாளர்  இ.சதீஷ்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் எம்.கே.பழனி, மாவட்ட பொருளாளர் பி‌.பத்மநாபன், இடைக்கமிட்டி செயலாளர்கள் வேலா.பாலு, ராஜீவ்காந்தி, மாணவர் சங்க மாவட்ட
செயலாளர் பி.சின்னராசு, நகர தலைவர் தீபன் ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்...

கொற்றவை செய்திகளுக்காக 
இரா.வெங்கடேசன் மாவட்ட செய்தியாளர் / சப்எடிட்டர்