சாப்பிட்ட உடனே நடப்பது செரிமானத்திற்கு உதவுமா..? தெரிந்துகொள்ளுங்கள்..!

13 November 2021

உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிடதும் 30-45 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நடக்க ஆரம்பிப்பது நல்லது.

பலர் சாப்பிடதும் உட்காரக் கூடாது சிறிது நேரம் நடக்க வேண்டும் என அறிவுறுத்துவார்கள். சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே இருக்கும். காரணம் சாப்பிட்டவுடன் நடந்தால் செரிமானம் வேகமாக நடக்கும். எளிதில் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும் என்பதுதான். ஆனால் உண்மையில் அவ்வாறு நடப்பது செரிமானத்தை தூண்டுமா..? தெரிந்துகொள்வோம்...
நீங்கள் சாப்பிட்ட பிறகு, உங்கள் உடல் செரிமான வேலையை செய்யத் தொடங்குகிறது. உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடைத்து தேவையானதை உறிஞ்சிவிடும். பின் அந்தந்த உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை பிரித்து அனுப்பும். உணவின் ஊட்டச்சத்துக்களை உடைக்கும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க அளவு செரிமானம் சிறுகுடலில் நடைபெறுகிறது. எனவே அந்த சமயத்தில் சாப்பிட்ட பிறகு நடப்பது வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு விரைவாக உணவுப் பரிமாற்றம் நிகழ உதவுகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
அப்படி உங்கள் வயிற்றில் இருந்து சிறுகுடலுக்கு உணவு எவ்வளவு வேகமாக செல்கிறதோ, அந்த அளவு வீக்கம், வாயு மற்றும் அமில எதிர்ப்புபோன்ற பிரச்சனைகளே வராது. உணவுக்குப் பின் 30 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்வது, வழக்கமான உடற்பயிற்சி செய்வது, குடல் செயல்பாட்டை மேம்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்று சான்றுகளும் இருக்கின்றன.
உணவுக்குப் பிந்தைய நடை பயிற்சி செரிமான அறிகுறிகளை எளிதாக்குவது மட்டுமல்லாமல், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நியூசிலாந்தின் ஒடாகோ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில், டைப்-2 நீரிழிவு நோயாளிகள், உணவுக்குப் பிறகு நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது என்பதை கண்டறிந்தனர்.எப்படி தெரியுமா..?
அதாவது உடல் உணவை குளுக்கோஸாக மாற்றுகிறது. இது உடலுக்கு தேவையான ஆற்றலின் முக்கிய ஆதாரமாகும். எனவே சாப்பிட்ட பிறகு, இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த அதிகரிப்பை சமாளிக்க, உடல் இன்சுலினை சுரக்கிறது. இது குளுக்கோஸை செல்களுக்குள் செலுத்த உதவுகிறது.
இருப்பினும், நீரிழிவு நோயாளிகளுக்கு, இன்சுலின் செயல்பாடு பலவீனமடைகிறது, இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கும் செயல்முறையைத் தடுக்கிறது. இதனால் இரத்தத்தில் குளுக்கோஸின் அதிக அளவுகளுக்கு வழிவகுக்கும். மேலும் உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கும். உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சியின் போது, குளுக்கோஸ் உடல் ஆற்றலுக்காக குளுக்கோஸை பயன்படுத்திக்கொள்கிறது. இது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் குறைக்க உதவுகிறது.                
  \1\6உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் உடற்பயிற்சிகள்..!
நடைப்பயிற்சி செய்ய, உணவுக்குப் பிறகு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?
சாப்பிட்ட உடனேயே நடப்பது அமில வீச்சு மற்றும் உங்கள் வயிற்றில் கோளாறுகளை ஏற்படுத்தும். எனவே உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவு சாப்பிடதும் 30-45 நிமிடம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு நடக்க ஆரம்பிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவுக்குப் பிறகு வேகமாக அல்லாமல் மிதமான வேகத்தில் நடக்க வேண்டும். ஏனெனில் தீவிர உடற்பயிற்சிகள் தசைகள் மற்றும் இரைப்பைக் குழாயிலிருந்து அதிக இரத்தத்தை இழுக்கக்கூடும். இது உங்கள் செரிமானத்தை மெதுவாக்கும். இதனால் அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு, உணவுக்குப் பிந்தைய நடைப்பயிற்சி, ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எந்த உடல் செயல்பாட்டில் ஈடுபட்டாலும் எண்டோர்பின்கள் அல்லது நல்ல ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும் , இதனால் உடல் தசைகள் தளர்வடைகிறது. எனவே இதற்கு நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது.
எனவே உணவு சாப்பிட்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என மற்றவர்களிடம் தைரியமாக சொல்லுங்கள்.. நீங்களும் தவறாமல் நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள்.