சமூகநீதி மாநாடு கால்கோள் விழா

30 June 2022

சமூகநீதி மாநாடு கால்கோள் விழா

சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில்,  29.06.2022 -ம் தேதி புதன் கிழமை காலை 09.00 மணி அளவில் மதுரை சர்வதேச விமானம் நிலையம் பின்புறம் அமைக்கப்படுள்ள சமூகநீதித் திடலில் சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதி மாநாடு கால்கோள் விழா இனிதே சிறப்பாக நடைபெற்றது.

வருகின்ற ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று மதுரையில் சமூகநீதி திடலில் மத்திய மாநில அரசுகளை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி நடைபெறவுள்ள சமூகநீதி மாநாட்டின் துவக்கமாக நடைபெற்ற இன்றைய கால்கோள் விழாவில் BC/MBC/DNT சமூகங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக பங்கேற்றனர்.மேலும் மாநாட்டு இலச்சின்னயமும்(LOGO) இன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக மதுரை வில்லாபுரம் "நாகரத்தினம் அங்கம்மாள்" திருமண மண்டபத்தில் அனைத்து சமூக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகள் எந்த நியாயமான காரணமின்றியும் கடந்த 72 ஆண்டுகலாக சரியான சாரிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் செயல் மிக வருத்தமளிக்கிறது. சென்செஸ் 2021ல் ஓபிசி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லையென்றால் சென்செஸ் கணக்கெடுப்பை முற்றிலுமாக புறக்கணிப்பது என்றும். சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை பெருவாரியான மக்களிடம் எப்படி கொண்டு சேர்ப்பது, பெருவாரியான மக்களை மாநாட்டிற்கு அழைத்து வருவது குறித்தும் அதற்கான பொருளாதாரம், பணிகளை பகிர்ந்து கொள்வது குறித்தும், சமூகநீதி மாநாட்டு மலர் வெளியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. பங்கேற்ற அனைத்து சமுதாயத் தலைவர்களும் அனைத்து பொறுப்புகளையும் அனைவரும் பகிர்ந்து செய்வோம் என்று ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது. அடிக்கோல் விழாவும் ஆலோசனை கூட்டமும் மிகச் சிறப்பாக நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் பல சமூகம்  சார்பாக முதல் தவணையாக மாநாட்டு நிதி வழங்கப்பட்டது.


- சீர்மரபினர் நலச்சங்கம் மற்றும்
BC/MBC/DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு.