ராஜபாளையத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா

20 February 2021

ராஜபாளையத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திமுக தலைவர்  ஸ்டாலின்  பிறந்த நாளை முன்னிட்டு  சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன்  ஏற்பாட்டில் இன்று இராஜபாளையம் ஆனந்தா கார்டனில் வைத்து  இராஜபாளையம் தொகுதியில் உள்ள 3000 கழக மகளிர் அணி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தனுஷ் M.குமார் MP , தங்கப்பாண்டியன் MLA ஒன்றிய சேர்மன் G.சிங்கராஜ் அவர்களும் பேன்சி பட்டு சேலைகளை வழங்கினார்கள். 

இந்நிகழ்வில் பேசிய தங்கப்பாண்டியன்,  திமுக தலைவர் அன்பு தளபதியார் ஸ்டாலின் அவர்கள் முதல்வரானதும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களில் மகளிர்கள் வாங்கி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் பெண்களின் நலன் கருதி இராஜபாளையம் தொகுதியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடங்கப்படும் என கூறினார் மேலும் கேஸ் விலை உயர்வால் மகளிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஆகவே கழக ஆட்சி அமைந்தவுடன்  விரைவில் கேஸ் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார், அதனை தொடர்ந்து பேசிய MP  அவர்கள் பொதுமக்கள் விரும்பாத ஆட்சி தற்போது நாட்டில் நடைபெற்று வருகிறது அதனை அகற்ற பெண்களால் மட்டுமே முடியும் ஆகவே பெண்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கூறினார். இந்நிகழ்வில் வடக்கு நகர பொறுப்பாளர் மணிகண்ட ராஜா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் கனகராஜ், ஷியாம் ராஜா அவர்கள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல்முருகன் ஒன்றிய துணை சேர்மன் துரைகற்பகராஜ் மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி பேரூர் கழக செயலாளர் சிங்கப்புலி அண்ணாவி பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர்  மற்றும் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கவுன்சிலர்கள் மற்றும் கழக முன்னோடிகள்  என ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு மதிய உணவருந்தி சென்றனர். .