திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

20 March 2023

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில்    மக்கள் குறைத்தீர்க்கும்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல் புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு  அகற்றுதல் கல்விக்கடன்  வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 235 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம்  அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.9050/- (ரூபாய் ஒன்பதாயிரத்து ஐம்பது) மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதிகளில் தங்கி பயிலும் பள்ளி கல்லூரி மாணவ  மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கலைதிருவிழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழுடன் கூடிய கேடயத்தினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.