தனுஷ், கஸ்தூரி ராஜா அதிரடி. மதுரை தம்பதிக்கு நோட்டீஸ்

21 May 2022

நடிகர் தனுஷை தனது மகன் என உரிமை கோரிய மதுரை தம்பதியருக்கு எதிராக இயக்குனர் கஸ்தூரிராஜா, நடிகர் தனுஷ் சார்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .


நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கூறி மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர் . அத்துடன் ஊடகங்களிலும் தனுஷ் தங்கள் மகன் என்று பேட்டி அளித்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.


இந்த நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும் , நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும் , கஸ்தூரி ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர் .


இந்த குற்றச்சாட்டுகளுக்கு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் , தவறினால் 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் எனவும் நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கஸ்தூரிராஜா சார்பில் கதிரேசன் தம்பதியினருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் .