அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது 

15 September 2021

 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக ராந்தம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கு வட்டார மருத்துவ அலுவலர் என் ஈஸ்வரி மருத்துவ அலுவலர் இளையராஜா தலைமையாசிரியர் துரை ஆசிரியர் சரவணன் சுகாதார ஆய்வாளர் சம்பத் செவிலியர் கலைவாணி சகாயமேரி மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் மருத்துவர் பேசுகையில் குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் திறந்த வெளியில் மலம் கழிக்கும்போது புழுக்களின் முட்டைகள் மண்ணில் கலந்து வளர்கின்றன அசுத்தமான கைகள் சுகாதாரமற்ற உணவுகள் உட்கொள்ளுதல் மற்றும் தோலின் வழியாக புழுக்கள் உடலினுள் உட் செல்கின்றன முட்டைகள் மற்றும் சிறு புழுக்கள் உடலில் வளர்ச்சி பெற்று முதிர்ந்த புழுக்கள் ஆகி உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது புளு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் சோர்வு மற்றும் சுகவீனம் பசியின்மை ரத்தசோகை குமட்டல் வாந்தி வயிற்று வலி வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படுகிறது குடற்புழு நீக்க மாத்திரை ரத்த சோகையை தடுக்கிறது அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது குழந்தைகள் நாள்தோறும் பள்ளிக்கு வருவது அதிகரிக்கிறது போன்ற தகவல்கள் மருத்துவர் தெரிவித்தார்