பெண்களை இழிவாகும்; காவல்துறை தரக்குறைவாக பேசிய திமுக சார்ந்த காடுவெட்டி தியாகராஜன் கண்டித்தும் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

20 November 2020

திருச்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை அருகில் ஜெயக்குமார் மணிகண்ட வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாயாகவும் சகோதரியாகவும் மதிக்க வேண்டிய பெண்களை இழிவாகும் காவல்துறை தரக்குறைவாக பேசிய திமுக வடக்கு மாவட்ட கழக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் கண்டித்தும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் முத்துக்கருப்பன் மணிகண்ட தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் செல்வராஜ் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சேவியர் மாவட்ட கழக பொருளாளர் அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கர் முன்னாள் செயலாளர் திருமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பொது மக்களும் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் திருச்சியில் பெட்டவாய்தலை,ஸ்ரீரங்கம், மணச்சநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

திருச்சி செய்தியாளர் ஹரிஹரன்