சிலிண்டர் டெலிவரி மேன்களை முன் களப் பணியாளர்களாக அறிவிக்க வழியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அனைத்து ஊழியர்கள் ஒன்றிணைந்து கொரோனா நிதியாக 11800 அளிக்கப்பட்டது.

09 June 2021


தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சிலிண்டர் டெலிவரி மேன்ஸ் தொழிற்சங்கம் சார்பில் தலைவர் நடராஜன், செயலாளர் சுதாகர் மற்றும் உறுப்பினர்கள் சேர்ந்து மனு அளித்தனர் அந்த மனுவில் சிலிண்டர் டெலிலவரி செய்யும் தொழிலாளர்கள் கொரனா காலத்திலும் சிலிண்டர் சப்ளை செய்கிறோம் ஆகையால் எங்களையும் முன் களப்பணியாளராக அறிவிக்க மத்திய மாநில அரசை வலியுறுத்தியும், அனைத்து தொழலாளர்களின் இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பிடித்தம் செய்ய வேண்டும், சிலிண்டர் சப்ளை செய்யும் வாகனங்களுக்கு எரி பொருள் வழங்கவேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் மாத சம்பளம் வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஊழியர்களும் தங்களால் முயன்ற சிறுதொகை சேர்த்து 11800 ரூபாயை கொரோனா தடுப்பு நிதிக்கு வழங்கினர். பொருளாளர் முருகேசன், துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்துனர்..